தேனியில் கொள்ளையடிக்கப்பட்ட - 9 ஐம்பொன் சிலைகள் 24 மணி நேரத்தில் மீட்பு: ஒருவர் கைது :

தேனி கோயிலில் கொள்ளை அடிக் கப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை தனிப்படையினர் 24 மணி நேரத்தில் மீட்டதுடன் குற்றவாளியையும் கைது செய்தனர்.

தேனி அரண்மனைப்புதூர் அருகே உள்ளது வேதபுரி. இங்குள்ள தட்சி ணாமூர்த்தி கோயிலில் கடந்த 26-ம் தேதி அதிகாலையில் 9 ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.

ஆசிரம மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் ஆய்வு செய்து, காவல் துணை கண்காணிப்பாளர்கள் பால்சுந்தர், முத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வாளர் மத னகலா, சார்பு ஆய்வாளர்கள் அசோக், சுந்தரலிங்கம், ராமபாண்டியன் ஆகி யோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படையினரின் விசாரணையில் தேனி மாவட்டம், பெரியகுளம் மில்லர் சாலையைச் சேர்ந்த தர் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து விசாரித்ததில் பெரியகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் சேர்ந்து சிலைகளை திருடியது தெரிய வந்தது.

இதன்படி 9 சிலைகளும் மீட்கப் பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். சிலை திருட்டுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத் தையும் பறிமுதல் செய்தனர். தலை மறைவான கார்த்திக்கை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்பி கூறு கையில், சிலை திருட்டில் ஈடுபட்ட தர் மீது பெரியகுளம், திருப்பூர் தூத்துக்குடி உள்ளிட்ட காவல் நிலை யங்களில் கொலை, சிலை திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. குண் டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில் வெளிவந்துள்ளஆர். இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை தனிப்படையினர் பிடித்துள்ளனர் என் றார். தனிப்படையினருக்கு திண்டுக்கல் சரக டிஐஜி பி.விஜயகுமாரி, எஸ்பி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE