மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் முகமது அசீம் என்ற முகநூல் கணக்கில் இருந்து நண்பருக்கான விருப்ப அழைப்பை ஏற்றார். பிறகு தனது வாட்ஸ் ஆப் எண்னை கொடுத்து இருவரும் பேசியுள்ளனர்.
இந்நிலையில் எதிர் முனையில் பேசியவர் டிவி சீரியல் நடிகர் எனத் தெரிவித்துள்ளார். திடீரென அவர் அவசரமாக பணம் தேவை எனக் கூறி ரூ.2,56,500 கடனாக பெற்று ஏமாற்றிவிட்டு, போனை சுவிட்ஸ்-ஆப் செய்தார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் சார்மிங் ஓய்ஸ்லின் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி சென்னை திருவெற்றியூர் சின்ன மேட்டுபாளையத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவரின் மகன் சந்தோஷ் ராஜா, அவரது மனைவி சித்ரா ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரும் நிலக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago