குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமைக் கல்வி ஈரோட்டில் 10 கிராமங்களில் கற்பிக்க முடிவு :

By செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமைக்கல்வி திட்ட தொடக்கவிழா, ஈரோட்டில் நேற்று நடந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை குழந்தைப் பருவத்தில் இருந்தே பயிற்றுவிக்கும் வகையில், இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, கிராமங்களில் உள்ள 11 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட 20 குழந்தைகளை தேர்வு செய்து குழந்தைகள் மன்றத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசமைப்புச் சட்டம் குறித்து தன்னார்வலர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படும்.

வான்முகில் என்ற அமைப்பினர் மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில், 125 கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 மலைக் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோட்டில் நேற்று நடந்த விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வான்புகழ் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி, செங்குந்தர் கல்விக்கழக செயலாளர் எஸ்.சிவானந்தன், தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி, கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி, சுடர் அமைப்பின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்