மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் - போலீஸாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம் :

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையம், சமூகவியல் துறை சார்பில், சமூகநீதி மற்றும் அறிவொளியின் இரண்டாவது தொடரின் விரிவுரை நேற்று நடைபெற்றது. 'பெரியாரும் இஸ்லாமும்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்வி கேட்கப்போவதாக அறிவித்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் மற்றும் பலர் பல்கலைக்கழகத்துக்கு திரண்டு சென்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். `அனுமதியின்றி உள்ளே செல்லக் கூடாது’ என்று போலீஸார் கூறினர். இதனால், போலீஸாருடன், இந்து முன்னணி அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்து முன்னணி அமைப்பினரை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றால நாதன் கூறும்போது, “பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் அனைவரும் கலந்துகொள்ளலாம் என விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால், எங்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தமிழக ஆளுநர் இதில் தலையிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

போலீஸாருடன், இந்து முன்னணி அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்து முன்னணி அமைப்பினரை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE