திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில், "தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வாங்கும் வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி நவம்பர் 1, 2 மற்றும் 3-ம் தேதி என தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் நேர மாற்றம் செய்யப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வாங்கிக் கொள்ளலாம்.
இதில், ஏதேனும் குறைபாடு இருந்தால் வட்ட வழங்கல் அலுவலரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04179-222111 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago