ராணிப்பேட்டை அருகே மயானப் பகுதிக்கான சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பொன்னியம்மன் கோயில் அருகே மயானப்பகுதிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை என அப்பகுதி மக்கள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுஅனுப்பினர். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அரசு அதிகாரிகள் காரை கிராமத்துக்கு சென்று மயானப்பகுதிக்கு செல்ல தேவையான இடங்களை ஆய்வு செய்தனர். பிறகு, தனியார் இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு மயானப்பகுதிக்கு செல்வதற்கான தார்ச்சாலை அமைக்க தமிழக அரசு ரூ.1. கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து, மயானப்பகுதிக்கான தார்ச்சாலை அமைக்கும் பணியை தமிழக கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago