விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 74,850 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் நேற்று முன்தினம் வரை 1,772 விவசாயிகள் 4,329 ஏக்கருக்கு மட்டுமே திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
தாமதிக்க வேண்டாம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் நீர் தேங்கி சம்பா பயிருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது, அவ்வாறு பயிர்ச் சேதம் ஏற்படின் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது சாகுபடி செய்துள்ள பயிரினை உடனடியாக கடைசி நாள் வரை காத்திருக்காமல் அருகிலுள்ள பொதுச்சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் உரிய முன்மொழிவு படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களான சிட்டா அடங்கல், ஆதார் எண் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றை கொண்டு சென்று திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ரூ. 50.8 கோடி இழப்பீடு
கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்த 26,386 விவசாயிகளுக்கு ரூ50 கோடியே 80 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.எனவே அனைத்து சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் தங்களது பயிரினை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15.11.2021ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் இணை இயக்குநர் கோ. ரமணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago