இந்திய தணிக்கையாளர் கழகத் தலைவர் ஜம்பு சாரியா ‘தாய்மொழியான இந்தியை, இந்திய தணிக்கையாளர் கழகம் தனது பணிக் கலாச்சாரத்தில் இணைத்து மேம்படுத்த வேண்டும்’ என்று ‘தி சார்டர்ட் அக்கவுன்டன்ட்’ இதழில் எழுதி உள்ளார்.
அக்கழகத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டில் 19,500 மொழிகள் உள்ளன. 32 மொழிகள் 10 லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாகவும், மேலும் 28 மொழிகள் ஒரு லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாகவும் உள்ளன. இந்தி அனைவருக்குமான தாய்மொழி அல்ல. உங்கள் கூற்று உண்மையும் அல்ல. நாட்டின் மொழிப் பன்மைத்துவத்துக்கு எதிரானது.
மேலும் தணிக்கையாளர் கழகம் நாடாளுமன்ற சிறப்புச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்ட நெறிகளை கடைப்பிடிக்கும் கட்டுப்பாடும் உடையது. இந்திய அரசியல் சாசனம் 8-வது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரித்திருக்கிறது.
உங்கள் கூற்று இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும். எனவே அரசியல் சாசனத்துக்கு எதிரான உங்களின் கருத்தை திரும்பப்பெற வேண்டும். தமிழகம் என்றுமே இந்தி திணிப்பை அனுமதிக்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago