வெம்பக்கோட்டை அருகே மதுக் கூடம் அமைக்க எதிர்ப்பு : ஆட்சியரிடம் 3-வது முறையாக மனு

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தனியார் மதுக்கூடம் (பார்) வைப்பதற்குப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வெம்பக்கோட்டை அருகே உள்ள அன்னபூரணியாபுரத்தில் தனியார் சார்பில் மதுக்கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுக்கொடுத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டியிலிருந்து அன்னபூரணியாபுரத்துக்குச் செல்ல வேண்டும். இப்பாதையில் தனியாருக்குச் சொந்தமான மதுக்கூடம் அமைக்கப்படுகிறது. அரசுப் பள்ளி, மாடசாமி கோயில் போன்றவைகளும் இப்பகுதியில்தான் உள்ளன. மேலும், பள்ளி செல்லும் குழந்தைகள், ராஜபாளையத்துக்கு வேலைக்காகவும், மருத்துவத்துக்காகவும் செல்ல வேண்டுமெனில் பொதுமக்கள் இப்பாதை வழியாகவே சென்றுவர வேண்டும்.

கிராமத்தின் பிரதான பாதையில் மதுக்கூடம் அமைப்பதால் பெண்கள், மாணவிகள் சென்று வருவது அச்சத்தை ஏற்படுத்தும். அதோடு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்படும். எனவே, மதுக்கூடம் அமைப்பதைத் தடுக்க வேண்டும் என ஏற்கெனவே இருமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மூன்றாவது முறையாக தற்போது மனு அளித்துள்ளோம், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்