ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மலையடிவாரத்தில் உள்ள காமராஜர் நீர் தேக்கம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நிரம்பியது. (உயரம் 23.5 அடி).
இதை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு மறுகால் பாயும் இடத்தில் மலர்களை தூவினார். பின்னர் அவர் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் முன்பே காமராஜர் நீர் தேக்கம் நிரம்பி வழிகிறது. இதனால் திண்டுக்கல் நகர் மற்றும் வழியோர கிரா மங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது.
ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்தை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரங் களில் ஒன்றான காமராஜர் நீர் தேக்கம் நிரம்பி வழிவதால், உபரி நீர் குடகனாறு ஆற்றில் செல்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago