காவிரியில் கழிவுகள் கலப்பதாக புகார் - மேட்டூர் அணை நீரை ஆய்வு செய்ய நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

காவிரி ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மேட்டூர் அணை நீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேட்டூர் அணை மற்றும் காவிரி நீர்த்தேக்கப் பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர், நாகமரை, மூலக்காடு, திப்பம்பட்டி, கீரைக்காரனூர் பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஆலை கழிவுகள், ரசாயன கழிவு மற்றும் சாக்கடை கழிவு கலப்பதால் துர்நாற்றம் வீசி வருவதாக காவிரி கரையோரப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மேட்டூர் அணை மற்றும் காவிரி நீர்த்தேக்கப் பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட அலுவலர் ஜெகதாம்பாள், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செங்கோடன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் மதுசூதனன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

மேலும், தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.

தண்ணீர் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்