நெல்லை அரசு ஐடிஐ-ல் அக். 30-ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் :

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 30-ம் தேதி காலை 9 மணி முதல் திருநெல்வேலி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்று தற்போதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்களும், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.

இதில் தேர்வு பெற்று ஒரு வருட தொழிற்பிரிவுகளில் பயிற்சியை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700 மற்றும் 2 ஆண்டு தொழிற் பிரிவுகளில் பயிற்சியை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8,050 உதவித்தொகையாக வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஒரு தொழிற்பழகுநருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகையில் 25 சதவீதம் தொகை அல்லது ரூ.1,500 ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.

எனவே, ஐ.டி.ஐ முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04622-342432, 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்