திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 29-ம் தேதி காலை நடைபெறும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த குறைதீர்வு கூட்டங்கள் கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைதீர்வுக் கூட்டம் மற்றும் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம், எனது தலைமையில் வரும் 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. வேளாண், தோட்டக் கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், வங்கியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பொதுவான கோரிக்கையை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago