பாலுக்கான நிலுவைத்தொகை ரூ.62 கோடியை வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தோடு ஆவின் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
பால் உற்பத்தியாளர் களுக்கு ஆவின் நிர்வாகம் ரூ.62 கோடி பாக்கி வைத்துள்ளது. இத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பாலுக்கான பணத்தை வங்கியில் செலுத்தாமல், ஆரம்ப சங்கங்களிலேயே வழங்க வேண்டும். துணை குளிரூட்டும் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பாக்கி, வாகன வாடகையை வழங்க வேண்டும்.
தவுடு , கலப்புத்தீவனம், பருத்திக்கொட்டை, உலர் தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42 எனவும் , எருமைப்பாலுக்கு ரூ.51 எனவும் அறிவிக்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago