ஈரோட்டில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெய கோவிந்தன் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்ட மூத்த வழக்கறிஞரான தியாக காமராஜரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீஸார், கணினியை சேதப்படுத்தி, முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளனர். போலீஸாரின் செயலை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தஞ்சாவூர் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதன்தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின்(ஜாக்) தலைவர், தமிழக டிஜிபி.,க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார். ஆனால், போலீஸார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை, கொடுமுடி, அந்தியூர் நீதிமன்றங்களில் பணிபுரியும் 1500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago