மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகம் முன் மாநகராட்சி சிஐடியூ தொழிலாளர்கள் கையில் திருவோடு ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர்.
மதுரை மாநகராட்சியில் அனைத்துப் பிரிவுகளையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், தினக்கூலி, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய தூய்மைத்தொழிலாளர்களுக்கும், பொறியியல் பிரிவில் உள்ள அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக ரூ.625 வழங்க வேண்டும், மாநகராட்சி தெரு விளக்கு ஒப்பந்த கிரேடு- II பணியாளர்கள் 32 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சுகாதாரம், தூய்மை, பொறியியல் பிரிவு பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந் தரம் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ம.பாலசுப்பிரமணியம், சிஐடியூ மாவட்டத் தலைவர் கணேசன், செயலாளர் தெய்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜா ஆகியோர் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago