சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ரூ.7.4 கோடியில் காவலர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ள பகுதியை, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி விசுவநாதன் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் புதுப்பட்டியில் ஏற்கெனவே உள்ள காவலர் குடியிருப்பு பகுதியை டிஜிபி பார்வையிட்டார். அப்போது, பழுதடைந்த வீடுகளையும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதே பகுதியில் ரூ.7.4 கோடியில் புதிதாக காவலர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ள பகுதியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து கழிவுநீர் கால்வாய், சாலை, தண்ணீர் வசதி போன்றவற்றை பொதுப்பணித் துறை, போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது செந்தில்குமார் எஸ்பி, திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago