மின்வாரிய தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மதுரை கோ.புதூரில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததைக் கண்டித்தும், போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐக்கிய சங்க மாநில இணை பொதுச்செயலாளர் ஆர்.முத்துலிங்கம் தலைமை வகித்தார். இதில், சிஐடியூ அறிவழகன், ஐக்கிய சங்கம் பழனிச்சாமி, கருப்புச்சாமி, ஜனதா சசாங்கன், ஐஎன்டியுசி பிரபாகரன், அண்ணா தொழிற்சங்கம் கவுதமன், பொறியாளர்கள் சங்கம் சுப்பிரமணியன் உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

மேலும் போனஸ் பெறாத பொறியாளர்கள் அலுவலர்கள் மற்றும் கேங்மேன் அனைவருக்கும் கருணைத் தொகை வழங்க வேண்டும், மத்திய அரசு வழங்கிய 11 சதவீத மற்றும் 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்