தேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் விரைவில் தொடங்க வேண்டும் : துறை செயலாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தை அமைப்பது தொடர்பான கடிதங்களை மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத் துறை செய லாளர் அபர்ணா, நிதித் துறை செயலாளர் (செலவினம்) டி.வி. சோமநாதன் ஆகியோரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் வழங்கி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப் பதாவது: தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்துக்காக மதுரையில் 2012-ல் வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்துக்கு முன்நுழைவு அனுமதிக்கான சான்று மட்டுமே தரப்பட்டுள்ளது. அந்த நிலமானது கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. மருந்தியல் கழகம் அதற்காக விண்ணப்பிக்கவில்லை. பிற்காலத்தில் இது தேவையற்ற பிரச்சினையை உருவாக்கும்.

எனவே நிலத்தை தேசிய மருந்தியல் கல்விக் கழகத்தின் பெயரில் மாற்றித்தர விண்ணப்பங் களை அனுப்பி வைக்குமாறு துறைச் செயலாளரிடம் வலியுறுத் தினேன். மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இருந்து பெற்ற விண்ணப்பத்தையும் மத்திய அரசின் செயலாளர் வசம் ஒப்படைத்தேன். இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்