ராமநாதபுரத்தில் - இன்று முதல் 5 நாட்களுக்கு தங்க பத்திரம் விற்பனை :

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு தங்க பத்திர விற்பனை நடைபெறுகிறது.

மத்திய அரசு தங்க பத்திரத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. அதன்படி, தற்போது தங்க பத்திர விற்பனை இன்று (அக். 25) முதல் அக். 29 வரை 5 நாட்கள் மட்டும் அஞ்சலகங்களில் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை நடக்கிறது.

தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.4761 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தங்கள் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும் 8 ஆண்டு கள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும்.

தங்கப் பத்திரம் வாங்க ஆதார் கார்டு நகல், பான் கார்டு நகல் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம் என ராமநாதபுரம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மு.சித்ரா தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE