மதுரை மாவட்டம், திருமங்கலம் அண்ணா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் காசிமாயன். இவரது மனைவி சிவப்பிரியா. இவர் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் டிஜிபி, தென்மண்டல, மத்திய மண்டல ஐஜிக்கள், மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என்னிடம் இடம் ஒன்றை கிரயம் செய்து தருவதாகக்கூறி, மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த பாண்டி அனுசியா, கண்ணன், அவரது குடும்பத்தினர் ரூ.32 லட்சத்தை வாங்கி ஏமாற்றினர்.
இது குறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தேன். மேற்கண்ட நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில் தொடர்புடைய பாண்டி அனுசியா, அவரது தந்தை கண்ணன் ஆகியோர் தலைமறை வாக இருந்தனர். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு நான் கணவருடன் சென்றபோது அங்கு பாண்டி அனுசியா, கண்ணன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம் பணம் குறித்து கேட்டபோது, என்னைத் தாக்க முயன்றனர். அப்போது, அங்கு வந்த காவல்துறையினர், பாண்டி அனுசியா, கண்ணனை தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதை அறிந்து, மதுரை மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ ஒருவர் தலைமையில் காவலர்கள் 5 பேர் தஞ்சாவூர் வந்தனர். அவர்கள் கண்ணனை மட்டும் அழைத்துக் கொண்டு, அனுசியாவை தப்பிக் கச் செய்தனர். இதைக் கேட்ட போது, காவல் ஆய்வாளர் உள் ளிட்ட அதிகாரிகளின் உத்தரவு என்றனர். மேலும், தஞ்சாவூர் தாலுகா எஸ்ஐ ஒருவர் என்னை திட்டி அனுப்பினார்.
இது தொடர்பாக மதுரை நகர் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர், சிறப்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீதும், என்னை மிரட்டிய தஞ்சாவூர் எஸ்ஐ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள் ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago