பெண்ணுரிமையை பாதுகாக்க நீதிமன்றங்கள் உதவி நீதிபதி ராம்விக்னேஷ் பேச்சு :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மகளிர் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, வாடிப்பட்டி சட்டப் பணிகள் குழு, ஆதி தமிழர் ஜனநாயகத் தொழிலாளர் நலச் சங்கம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.

சட்டப் பணிகள் ஆணைக் குழு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், வழக்கறிஞர்கள் அர்ச்சனாதேவி, ஜார்ஜ் மார்க்ஸ் ஆகியோர் பேசினர்.

இதில் வாடிப்பட்டி உரிமையியல் நீதிபதி ராம்விக்னேஷ் பேசியதாவது:

பெண்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் பல்வேறு சிறப்புச் சட்டங்கள் அமல்படுத்தப் பட்டுள்ளன. இந்த சட்டங்களால் சம உரிமை கிடைத்துள்ளது.

மகளிருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு, அந்தஸ்து, பிரதி நிதித்துவம் கிடைத்துள்ளது. பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. பெண்ணு ரிமையை காக்க நீதிமன்றங்கள் உதவி செய்கின்றன. மகளிருக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்