ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை களை வனக் காவல் நிலையத்தினர் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் வனக்காவல் நிலையத்தினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, வனச்சரகர் லோகநாதன் தலைமையிலான வனத்துறையினர், தேவிபட்டினம் பெரிய பஜார் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து, வனக் காவல் நிலையத்தினர் அங்கிருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட 460 கிலோ கடல் அட்டைகள், எரிவாயு சிலிண்டர்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தேவிபட்டினத்தைச் சேர்ந்த சித்திக்(57), ஜாஹீர் உசேன்(27) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago