காகிதப் பூக்களான திமுக தேர்தல் வாக்குறுதிகள் : முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காகிதப் பூக்கள் போன்றது என முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தெரிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்கள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ள அவர்களது சிலைக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாமன்னர்களுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருப்பத்தூரில் மணிமண்டபம் அமைத்தார்.

202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக திமுக கூறியுள்ளன. வாக்குறுதிகள் எல்லாம் அறிவிப்போடு சரி, செயல்படுத்தவில்லை. திமுக தேர்தல் அறிக்கை எல்லாம் காகிதப் பூ போன்றது. இந்த பூக்கள் என்றும் மணக் காது. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. இக்கட்சி 31 ஆண்டுகள் ஆட்சி யில் இருந்து மக்களுக்காகப் பல்வேறு வர லாற்று திட்டங்களை தந்துள்ளன. இதன் மூலம் அதிமுக இன்றைக்கும் மக்கள் மனதில் நம்பிக்கை பெற்ற இயக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்