மதுரையில் அக்.27, 30-ம் தேதியில் - மருதுபாண்டியர், தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த வழிமுறைகள் : மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அக்டோபர் 27-ல் மாமன்னர்கள் மருது பாண்டி யர்கள் நினைவுநாள், அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்திலுள்ள மருதுபாண்டியர்கள் சிலை மற்றும் கோரிப் பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆட்சியரிடம் முன் அனுமதி பெற தத்தமது எல்கையில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் தங்களுடன் 5 நபர்களுக்கு மிகாமல் அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

பொது இடங்களில் உருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி கிடையாது. ஒலிபெருக்கி வைத்தல், வெடி வெடித்தல், கலை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் நடத்து வதற்கும் அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்