சபரிமலையில் நெய் அபிஷேகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் : ஐயப்ப சேவா சங்க தேசியத் தலைவர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருச்செங்கோட்டில் 64-ம் ஆண்டு அகில இந்திய ஐயப்ப சேவா சங்க புதிய நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஸ் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தலைவர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு சபரிமலை பம்பையில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பம்பையில் பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் கொண்டு செல்லும் நெய் அபிஷேகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். இரண்டு தடுப்பூசி போட்ட 25 ஆயிரம் பேர் மட்டுமே மலைமேல் தங்க அனுமதி என்று கூறியுள்ளனர்.

இதனை மாற்றி இரண்டு தடுப்பூசி போட்டு சான்றிதழ் வைத்துள்ள அனைவரையும் சபரிமலையில் தங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன, என்றார்.

முன்னதாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், செங்கோட்டையன், அன்புக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்