ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்ட மருது சகோதரர்களுக்கு திருச்சியில் நினைவுச்சின்னம் அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ரங்கத்தில் ஜோதி ஓட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரிய மருது, சின்ன மருது உள்ளிட்ட 500 பேர் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாதி, மத பேதமின்றி பொதுமக்களையும், சிற்றரசர்களையும் ஒன்று திரட்டும் வகையில் 1801-ம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை மற்றும் ரங்கத்தில் ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்ட மருது சகோதரர்களின் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ரங்கத்தில் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
தேவி தியேட்டர் அருகிலிருந்து ரங்கம் ராஜகோபுரம் வரை நடைபெற்ற இந்த ஜோதி ஓட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.லெனின், பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் ரெட்டைமலை, யுவராஜ், சந்தோஷ், முகேஷ், சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago