காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் 21- ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் போட்டியை எஸ்பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர். 7 கி.மீ., தொலைவுக்கு பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெண்கள் பிரிவில் 200 மாணவியர் கலந்துகொண்டனர். 5 கி.மீ., தொலைவுக்கு பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆண்கள் பிரிவில் வீரவநல் லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வி யியல் கல்லூரி மாணவர் பசுபதி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் 2-வது இடத்தையும், பாளை யங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர் நவீன்பிரபு 3-வது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான போட்டியில் புதூர் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவி கோகிலா முதலிடத்தையும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ராதிகா 2-வது இடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜெயமாலினி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை எஸ்பி வழங்கினார்.

மேலும் முதல் 10 இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.500-க்கான வெகுமதி கூப்பன்கள்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வா ளர்கள் சக்திவேல், நங்கையர் மூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந் தனர். போட்டிக்கான நெறிமுறை களையும், ஒழுங்குமுறைகளையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, மாவட்ட தடகள கழக செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள்சகாயம், இணை செயலாளர் சத்தியா சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கண்காணித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்