திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் தலைமையில், கடந்த 16-ம் தேதி அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், காப்பகங்களுக்கு உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள், படுக்கை வசதி உள்ளிட்ட உதவிகள் வழங்க காப்பக நிர்வாகி கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, நன்கொடை யாளர்கள் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் பொருட்கள் திரட்டப்பட்டு, அவற்றை காப்பகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.
மொத்தம் 17 காப்பகங்களுக்கு தேவையான பொருட்களை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் நன் கொடையாளர்கள் முன்னிலையில் வழங்கினார். மேலும் தீபாவளியை முன்னிட்டு முன்னதாகவே குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளையும், காப்பக பணியாளர்களுக்கு புத்தாடை களையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை காவல் ஆணையாளர்கள் டி.பி.சுரேஷ்குமார், கே.சுரேஷ்குமார், காவல் துணை ஆணையாளர் சங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன், மதுரை அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் சிவகுமார், குழந்தைகள் நல தலைவர் சந்திரகுமார், திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவல் ஆய்வாளர் ஜெகதா நன்றி கூறினார்.
தொடர்ந்து செய்தி யாளர் களிடம் காவல் ஆணையாளர் கூறும் போது, “காப்பகங்களின் சட் டரீதியான, சமூகரீதியான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றச் சம்பங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண் காணிக்கப்படும்” என்றார்.
“தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றச் சம்பங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும்”
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago