நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான மழை :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மூலக்கரைப்பட்டியில் 5 மி.மீ., நாங்குநேரியில் 4.50, களக்காட்டில் 1.20, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 137.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 919 கனஅடி நீர் வந்தது. 1,505 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 139.89 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 243 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை.

வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.36 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.

இதேபோல், தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் 3 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 81.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 72.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.57 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 130.25 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்