திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி பொருநை ரோட்டரி சங்கம், பசும்பொன் நேதாஜி மாணவர்கள் கழகம் மற்றும் பசும்பொன் நேதாஜி தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் கோலப் போட்டி நடத்தப்பட உள்ளது.

வரும் 28-ம் தேதி காலை 10 மணியளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ என்ற தலைப்பில் கோலப்போட்டி நடைபெறும். இதில் 25 பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும்.

கோலப் போட்டிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வரும் 26-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை 97515 03297 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

28-ம் தேதி காலை 11 மணியளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘இந்திய விடுதலைப் போராட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும், மதியம் 2 மணியளவில் ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான அட்டை, எழுது பொருள்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

போட்டிகளில் சிறந்த 3 வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பரிசளிப்பு விழா அக்டோம்பர் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9751503297 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்