அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர் களுக்கு மாவட்ட அளவிலான ‘கலா உத்சவ்’ போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட வுள்ளன என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், நமது பாரம்பரிய கலைகளில் இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, குரலிசை, கருவி இசை, நடனம், காண்கலை என 4 தலைப்புகளில் மாவட்ட அளவில் ‘கலா உத்சவ்’ போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மீனாட்சி மேல்நிலை பள்ளியில் வரும் 28-ம் தேதி காலை 9.30 மணிக்கு குரலிசை போட்டியும், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் காண்கலை (ஓவியம், இருபரிமாணம்) போட்டியும் நடைபெறும்.
வரும் 29-ம் தேதி காலை 9.30 மணியளவில் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடனப்போட்டி (செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற கலை) போட்டியும், வரும் 30-ம் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கருவி இசை (செவ்வியல், நாட்டுப்புறம்) போட்டியும் நடைபெறும்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் இதில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தப் படியாக மாநில அளவிலும், அதில் வெற்றிபெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள், நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள், மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago