ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த பாலாற்று வெள்ளம் :

பொள்ளாச்சி அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆஞ்சநேயர் கோயிலில் பந்தல் சரிந்து விழுந்தது.

பொள்ளாச்சி அடுத்த கரியாஞ்செட்டிபாளையத்தில் பாலாற்றங் கரையில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சனிக்கிழமை மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட தினங்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். சனிக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று கோயிலுக்கு செல்லும் தரைமட்ட பாலத்தில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்தது. கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். தரைமட்ட பாலம் அருகிலேயே நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோயில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்