கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: கொல்லிமலையில் பெய்த பலத்த மழையால் முதலாவது மற்றும் 24-வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொல்லிமலைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால், மலைப்பாதையில் முதலாவது கொண்டை ஊசி வளைவில் சாலையோரம் இருந்த மூங்கில் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால், நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 7 மணி வரை கொல்லிமலை சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சென்ற நெடுஞ்சாலைத் துறையினர் சாலையின் நடுவே முறிந்து கிடந்த மூங்கில் மரத்தை அகற்றினர். இதுபோல் 24-வது கொண்டை ஊசி வளைவிலும் சாலையின் நடுவே முறிந்து விழுந்து கிடந்த மரத்தை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். இதனால் 5 மணி நேரத்திற்குப் பின்னர் கொல்லிமலை மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து சீரடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்