தியாகராய நகரில் மாநகராட்சி, காவல் ஆணையர்கள் ஆய்வு :

தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.

இதையடுத்து, தியாகராய நகரில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா, வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் முகக்கவசம் அணிகின்றனரா என்பதை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தற்போது தினமும் 150 பேர்புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை குறையும்வரை அரசு அறிவுறுத்தல்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார். காவல் ஆணையர்சங்கர் ஜிவால் கூறும்போது, "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அதிகப்படுத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்