விழுப்புரம் நகரில் - குறைந்த மின் அழுத்த பகுதிகளில் 5 இடங்களில் புதிய மின் மாற்றிகள் : லட்சுமணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதால் மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ், மின்வாரிய துறை சார்பில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், 45 புதிய கட்டமைப்போடு கூடிய மின் மாற்றிகளும், 12 மின்மாற்றிகளில் கூடுதல் மின்திறனை உயர்த்தும் பணிகள் ரூ2.85 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது.

விழுப்புரம் தேவநாதசுவாமி நகர் விரிவாக்கம், கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகர், பாலாஜி நகர், சாலாமேடு காந்தி நகர், இபி காலனி அருகே ஆகிய 5 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி முடிவடைந்து நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு லட்சுமணன் எம்எல்ஏ தலைமை தாங்கி, புதிய மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்நிகழ்ச்சியில், மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ், உதவி கோட்ட பொறியாளர் சிவசங்கரன், உதவி பொறியாளர் ரவீந்திரன், திமுக நகர பொறுப்பாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்