கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 6-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 2,702 இடங்களில் நேற்று நடந்தது.
கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி, பாதிரிக்குப்பம் புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைபள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டது. நேற்று 917 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டது என்றார்.
இதே போல் விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் மோகன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மார் 83,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்று 1,330 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன என்றார். இதே போல விழுப்புரம் நகராட்சியில் நடைபெற்ற முகாமை விழுப்புரம் லட்சுமணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 455 இடங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் மாதா கோயில் மற்றும் தியாகதுருகம் வட்டாரத்திற்குட்பட்ட சோமநாதபுரம் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் .பி.என்.ஸ்ரீதர் கூறுகையில், " கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 6 ஆயிரம் முதல் 6,500 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago