சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூரம் கொடியேற்றம் :

By செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகாமி அம்மன் சன்னதியில் ஐப்பசி பூரத்தையொட்டி கொடியேற்றம் நடந்தது.

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகங்கை குளம் அருகே  சிவகாமி அம்மன் சன்னதி உள்ளது. ஐப்பசி பூரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. கனகசபை தீட்சிதர் சிவகாமி அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றி வைத்து ஐப்பசி பூர சலங்கை உற்சவத்தை தொடங்கி வைத்தார்.

விழா தொடர்ந்து 10 நாள் நடக்கிறது. இரு வேளைகளிலும் நான்கு வீதிகளில் சிவகாமி அம்மன் வீதி உலாவும், ஒன்பதாவது தினமான வரும் 30-ம் தேதி சனிக்கிழமை அன்று திருத்தேர் உற்சவமும், வரும் 31-ம் தேதி 10-வது நாள் உற்சவம் அன்று பட்டு வாங்கும் உற்சவமும் அதனைத் தொடர்ந்து பூரச் சலங்கை உற்சவமும், கொடி இறக்கும் உற்சவமும் நடைபெறும். வரும் 1-ம் தேதி திங்கள் கிழமை  சிவானந்த நாயகி சமேத  சோமாஸ்கந்தருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்