விழுப்புரம் - புதுச்சேரி - நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக - 2 குளங்களை தூர்த்து, 700 பனைகளை அகற்ற முடிவு : 10 கிராமங்களின் நீராதாரங்களை காக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விழுப்புரம் - புதுச்சேரி - நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக 2 குளங்களை தூர்க்கவும், 700 பனை மரங்களை அகற்றவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் 10 கிராமங்களின் நீர் ஆதாரங்களை காக்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் - புதுச்சேரி - நாகப்பட்டினம் தேசிய நான்கு வழிப் பாதை வேலை தற்போது நடந்து வருகிறது. இதில் மதகடிப்பட்டு கிராமத்தில் சாலைக்கு அருகில் செல்லும் நீர்வழி பாதையை (ஓடை) மூடப் போவதாகவும், அதேபோல் மதகடிப்பட்டு சந்தை தோப்பு அருகில் சுமார் 1,000 சதுர அடி கொண்ட குளம் மற்றும் திருவாண்டார்கோவில் இந்திய உணவுக் கழகம் எதிரில் உள்ள 1,000 சதுர அடி கொண்ட குளம் ஆகியவற்றை மண்கொண்டு தூர்த் தடைக்க எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருபு வனை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஏரிக்கரை மற்றும் அதில் உள்ள சுமார் 700பனை மரங்கள், ஆலமரம் போன்றவற்றை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்த எல்லைகள் வரையறை செய்யப்பட் டுள்ளது.

இதையடுத்து புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கீதநாதன், பொதுச்செயலர் ரவி ஆகியோர் பொம்மையார் பாளையத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறைஆணைய அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகை யில், “இரு குளங்கள், ஏரி மற்றும்குளத்துக்கான நீர்வழிப் பாதைகள் மூடலால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்கள், விவசாயம் பாதிக்கப்படும்.

இப்பகுதி முழுவதும் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது. அத்துடன் 700 மரங்களை அகற்றவும் உள்ளனர்.

விவசாயிகளின் நலன், பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் ஏரிக்கரை, குளம் மற்றும் நீர்வழிப் பாதைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தேசியநெடுஞ்சாலை விரிவாக்க பணி களை மேற்கொள்ள வேண்டும். இப்போது போடப்பட்டுள்ள அளவுகல்லை எதிர்புறம் அமைத்திடுவதால் இவை அனைத்தும் பாதுகாக்கப்படும் என்ற ஆலோசனையும் தெரிவித் துள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்