ஆன்லைன் பட்டா மாறுதல் நிலுவை மனுக்கள் மீது 3 மாதத்தில் தீர்வு : நில அளவை கூடுதல் இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

ஆன்லைன் பட்டா மாறுதல் செய்யக் கோரி பல மனுக்கள் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.

நில அளவை கூடுதல் இயக்குநர் கண்ணபிரான் ஆஜராகி, பட்டா மாறுதல் கோரிய ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 31 வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 994 மனுக்கள் நிலுவையில் இருந்தன. ஏப்.21 வரை மொத்தமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 632 மனுக்கள் பெறப்பட்டன. மொத்தமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 576 மனுக்களில் செப்.21 வரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 448 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டது. அக்.1 வரையில் ஒரு லட்சத்து 2128 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலுவை மனுக்களின் மீது 3 மாதத்தில் தீர்வு காணப்படும் என கூடுதல் இயக்குநர் உறுதியளித்துள்ளார். எனவே, விரைவாக இந்த மனுக்களின் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை குறித்து அக்.26-ல் அறிக்கை அளிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்