75-வது சுதந்திர தின விழாவையொட்டி சிவகங்கை அருகே பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. உதவி பேராசிரியர் ரஞ்சனி வரவேற்றார்.
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொருக்கும் அடிப்படை கடமைகள் உண்டு. அவற்றை நிறைவேற்ற வேண்டும். பொதுவாக நீர்நிலைகள், வனம், விலங்குகள், கனிமங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது நமது கடமை.
அதேபோல் உரிமைகளைப் பெறுவதற்கும் நமக்கு உரிமைகள் உண்டு. அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், தனி மனித பாதுகாப்பு சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பிரிஸ்ட் பல்கலைக்கழக சட்டப் பள்ளி சிறப்பு பேராசிரியர் பழனியப்பன், கல்லூரி தாளாளர் அசோக், முதல்வர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.
சட்டம் சார்ந்த தன்னார்வலர் நாகேந்திரன், காளிதாஸ் ஏற்பாடுகளை செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago