திருநெல்வேலியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி கரையில் சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி திருநெல்வேலியில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் நேருயுவ கேந்திரா, தேசிய மாணவர் படை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், என்பிஎன்கே நல்லதை பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டன.
இப்பணிகளை பாளையங் கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன் தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலத்துறை அலுவலர் ஞான சந்திரன் தலைமை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தை சேர்ந்த அன்கித்குமார், மாவட்ட இளைஞர்நலன் அதிகாரி ஞானசந்திரன், நம் கடமை குழு ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பணியில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மதிதா இந்துக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் என 150-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்கள் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago