கடந்த 2 ஆண்டுகளை விட இம்மாதம் - நெல்லை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு : அணைகளில் நீர் இருப்பும் கணிசமாக உயர்வு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளைவிட இம்மாதத்தில் அதிகளவில் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளிலும் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே அணைப் பகுதிகளிலும், பிறஇடங் களிலும் மழை பெய்துவருகிறது. கடந்த 2019, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்மாதத்தில் பெய்த மழையளவு அதிகம்.

இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் நேற்று காலை வரை யில் அம்பாசமுத்திரம்- 178.20 மி.மீ., சேரன்மகாதேவி- 141.40, மணிமுத்தாறு- 169 , நாங்குநேரி- 110.50, பாளையங்கோட்டை- 43, பாபநாசம்- 392, ராதாபுரம்- 147.40, திருநெல்வேலி- 34.60 மி.மீ. என்று மொத்தம் 1,216 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதேநேரத்தில் 2020-ல் அக்டோ பர் மாதத்தில் மொத்தம் 348.50 மி.மீ., 2019-ம் ஆண்டு அக்டோபரில் 917.60 மி.மீ. மழை மட்டுமே பெய்திருந்தது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. தொடர்ச்சி யாக பெய்துவரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

பாபநாசம் அணையில் 94.36 சதவீதம், சேர்வலாறு அணையில் 78.80 சதவீதம், மணிமுத்தாறு அணையில் 37.76 சதவீதம், வடக்கு பச்சையாறு அணையில் 9.46 சதவீதம், நம்பியாறு அணையில் 12.28 சதவீதம், கொடுமுடியாறு அணையில் 92.16 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் பாபநாசம் அணையில்- 67.24 சதவீதம், சேர்வலாறில்- 57.92 சதவீதம், மணிமுத்தாறில்- 33.64 சதவீதம், வடக்கு பச்சையாறில்- 3.68 சதவீதம், நம்பியாறு அணையில்- 7.63 சதவீதம், கொடுமுடியாறில்- 57.99 சதவீதம் தண்ணீர் இருந்தது.

2019-ம் ஆண்டில் இதே நாளில் பாபநாசத்தில் 67.19 சதவீதம், சேர்வலாறில் 59.57, மணிமுத்தாறில் 10.09, வடக்கு பச்சையாறில் வெறும் 0.50, நம்பியாற்றில் 5.16, கொடுமுடியாறில் 40.45 சதவீதம் தண்ணீர் இருந்தது.

அணைகளில் நீர்மட்டம்

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்):

பாபநாசம்- 138 அடி (143 அடி), சேர்வலாறு-141.63 (156), மணிமுத்தாறு- 78.50 (118), வடக்கு பச்சையாறு-16.65 (49.20), நம்பியாறு- 10.36 (22.96), கொடுமு டியாறு- 50.50 (52.50).

கோடகன்கால்வாயில் விநாடிக்கு 150 கனஅடி, பாளையங்கால்வாயில் 142 கனஅடி, மருதூர் மேலக்காலில் 700 கனஅடி, வைகுண்டம் தெற்கு பிரதான கால்வாயில் 618 கனஅடி, வைகுண்டம் வடக்கு பிரதான கால்வாயில் 1,093 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அடவிநயினார் அணையில் 22 மி.மீ. மழை

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 22 மி.மீ., கருப்பாநதி அணையில் 12, ராமநதி அணையில் 5, சிவகிரியில் 2, குண்டாறு அணை, செங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

நேற்று காலையில் . மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடனாநதி அணை நீர்மட்டம் 82 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 72.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.59 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 131 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்