விழிப்புணர்வு கூட்டத்தில் மூன்றாம் பாலினத்தினர்களுக்கு - மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் :

By செய்திப்பிரிவு

வேலூரில் நடைபெற்ற விழிப் புணர்வு கூட்டத்தில் மூன்றாம் பாலினத்தினர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப் பட்டன.

வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் வேலூர் மாவட்ட அனைத்து பாலின மக்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திருநங்கைகள் அறக்கட்டளை சார்பில் மூன்றாம் பாலினத்தினர் நலன் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு திருநங்கைகள் அறக்கட்டளை தலைவர் கங்கா நாயக் தலைமை தாங்கினார். கலைமாமணி மூன்றாம் பாலினத்தினர் சுதா வாழ்த்திப் பேசினார்.

இதில், மூன்றாம் பாலினத்தினர் பாதுகாப்பு குறித்தும், சமுதாய புறக்கணிப்பை மாற்றி அமைத்தல், மூன்றாம் பாலினத்தினர் வாழ்வாதாரம் மேம்படுத்துதல், சுயதொழில் பயிற்சி பட்டறைகள் நடத்துதல், எதிர்கால நம்பிக்கையை உருவாக்குதல், மூன்றாம் பாலினத்தினர் சுய உதவி குழுக்கள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மூன்றாம் பாலினத்தினர் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் 1 மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட 16 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்