தட்டுப்பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் - அதிக விலைக்கு விற்கப்படும் யூரியா : குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

வேலூர் மாவட்டத்தில் தட்டுப் பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் யூரியா மூட்டைகள் கூடுதல் விலைக்கு விற்கப் படுவதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவ சாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் தீக்ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:

விவசாயி: மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு உள்ளது. 3 ஏக்கர் கரும்புக்கு 1 மூட்டை யூரியா தருகிறார்கள். இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். தட்டுப்பாட்டால் தனியார் உரக்கடைகளில் 300 ரூபாய் யூரியா மூட்டையை ரூ.472-க்கு விற்கின்றனர்.

அதிகாரி: மாவட்டத்தில் 700 டன் யூரியா தேவை உள்ளது. ஆனால், 200 டன் தான் வந் துள்ளது.

ஆட்சியர்: தேவை எவ்வளவு என்ற விவரத்தை அதிகாரிகள் எனக்கு கொடுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை ஒரு வாரத்தில் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: வங்கிகளில் தடை யில்லா சான்று அளிப்பதற்கு பணம் வசூலிக்கின்றனர்.

ஆட்சியர்: பணம் வாங்காமல் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புகிறேன்.

விவசாயி: காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள தனியார் பள்ளி, கால்வாயை ஆக்கிரமித்துள்ளதால் 100 ஏக்கர் விவசாய நிலத்தில் மழை நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

ஆட்சியர்: காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.

விவசாயி: கூட்டுறவு வங்கிகளில் அடங்கல் இருந்தால் தான் கடன் கொடுக்கிறார்கள். நிலத்தில் பயிர் செய்வதற்கு கொடுப்பதில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்.

ஆட்சியர்: கூட்டுறவு துறை அதிகாரிகளிடம், ‘என்ன பயிர் செய்கிறார்களோ அந்த கடனில் 30 சதவீதத்தை முதலில் கொடுங் கள். கள ஆய்வுக்குப் பிறகு மீதிப் பணத்தை கொடுங்கள்’ என்றார்.

நீர்வளத்துறை அதிகாரி: மேல் அரசம்பட்டு ஆற்றில் ஆக்கிரமிப்பை அகற்ற ரூ.20 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அரசாணை கிடைத்ததும் ஆக்கிர மிப்பு அகற்றப்படும்.

கூட்டுறவுத்துறை அதிகாரி: கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுப் பட்டாவுக்கு தடையில்லா சான்று தேவை யில்லை என முடிவு செய் திருக்கிறார்கள். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது ஆய்வு நடத்தி கடன் வழங்கப்படும்.

ஆட்சியர்: பருவ நிலை மாறி வருவதால் விவசாயிகள் அனைவரும் தங்கள் பயிர் களுக்கு காப்பீடு செய்ய வேண்டும். அப்போதுதான் பயிர் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க முடியும். கூட்டத்தில் யாராவது கரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால் வெளியில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதையடுத்து, சிறப்பு முகாமில் 2 விவசாயிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE