வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் உள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த வாரியத்தில் 7 வார்டுகள் உள்ளன.

சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். வாரியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கவாரியத்தின் முதன்மை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை தடுக்கக்கோரியும், வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் எம்.பாரதியார் தலைமையில் பல்வேறு கட்சியினரும், நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அதன்பின் வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் எம்.பாரதியார் கூறும்போது, ‘‘வாரியத்துக்கு உட்பட்ட 7 வார்டுகளில் 126 வீடுகள் விதிமீறி கட்டப்பட்டதாகவும், அதை வரும் 26-ம் தேதியன்று இடிக்கவும் முதன்மைசெயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது கண்டிக்கதக்கது. இந்த வீடுகளை வரன்முறைப்படுத்த உள்ள வாய்ப்பை மக்களுக்கு அளிக்காமல், காலஅவகாசம் மற்றும் நோட்டீஸ் கொடுக்காமல் இடிக்க உத்தரவிட்டுள்ளதற்கு, அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீடுகளை இடிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்