நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஜாதி சான்றிதழை இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.“வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் பெற இணையவழிசேவை தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழானது தொடர்புடையசார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர்களின் கையெழுத்துடன் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, பழங்குடியினரின் நலன்கருதி, அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பித்து பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீலகிரியில் உள்ள பழங்குடியின பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago