போதையை ஏற்படுத்தும் மருந்துகள் மக்களுக்கு எளிதாக கிடைப்பதை தடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர், வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்தியதாக போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜெயராமனுக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங் கியது. இந்நிலையில் ஜெயராமன் மீது மீண்டும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்து போதைக்காகப் பயன்படுத்திய 5 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சுகளை கைப்பற்றினர். இதையடுத்து அவரது ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு மீண்டும் ஜாமீன் வழங்கக்கோரி ஜெயராமன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரிடம் இருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்ட மாத்திரைகள், மருத்துவரின் பரிந்துரையின்பேரில் வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் மாத்திரைகளாகும். ஆனால் அந்த மாத்திரைகளை மனுதாரர் போதைக் காகப் பயன்படுத்தியுள்ளார்.
மருந்து, மாத்திரைகளை மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்ய உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து மருந்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
மருத்துவக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் மருந்து கடைகளில் அடிக்கடி சோதனை நடத்தி, மருந்து, மாத்திரைகள் மருத்துவரீதியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர் 90 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago