மதுரையில் களைகட்ட தொடங்கிய தீபாவளி பஜாரில் குற்றச் செயல் களைத் தடுக்க, கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
நவம்பர் 4-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி, மதுரையில் தீபாவளி பஜார் களை கட்டியுள்ளது. விளக்குத்தூண், கீழவாசல், மாசி, மாரட் வீதிகள், நேதாஜிரோடு, டவுன்ஹால் ரோட் டில் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
விளக்குத்தூண் மற்றும் மாசி வீதி கடைகளில் குடும்பம், குடும்பமாக வந்து துணிகளை வாங்குகின்றனர். குற்றச்சம்பவங்களைத் தடுக்க, விளக்குத்தூண், திடீர்நகர், திலகர் திடல், தெற்குவாசல் காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர்.
முக்கியச் சந்திப்பு, பஜார்களை இணைக்கும் விதமாக கூடுதலாக நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜவுளிக்கடைகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தற்காலிக உயர் கோபுரங்களை ஏற்படுத்தி, கண்காணிக்கின்றனர். போலீஸார் கூறுகையில், ‘‘ இந்த ஆண்டு மக்கள் பொருட்கள் வாங்க குவிகின்றனர். சிறப்பு பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். வழிப்பறி திருடர்கள் உள்ளிட்ட பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பெண்கள் அதிக நகை அணிவது, பாதுகாப்பின்றி பணம் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண் டும். சந்தேக நபர்கள் பற்றி தெரிந்தால் உடனே அருகிலுள்ள காவலர்களிடம் தெரிவிக்க வேண் டும்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago