தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை வரி முறைகேடுகளைக் கண்காணிக்க தமிழகம் முழுதும் 1000 பணியாளர்களை கொண்டு கண்காணிப்பு பணி நடைபெறு கிறது, என்று வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித் துள்ளார்.
இது குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் வழங்குவார். திமுக அறிவித்த அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
பத்திரப்பதிவுத் துறையில் முதல் நிலைப் பணியாளர்கள் ஓர் இடத்தில் ஓராண்டும் 2-ம் நிலைப் பணியாளர்கள் ஓரிடத்தில் 2 ஆண்டுகளும், 3-ம் நிலைப் பணியாளர்கள் ஓரிடத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வணிகவரித் துறையில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை வரி முறைகேடுகளை கண்காணிக்க 1000 பணியாளர் களைக் கொண்டு கண் காணிப்பு பணி நடைபெறுகிறது" என கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago